UPDATED : மே 02, 2026 03:57 PM
ADDED : மே 02, 2026 03:50 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. அக்னி நட்சத்திரம் துவங்கவுள்ள நிலையில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் கொடுமையால் தவித்த மக்களுக்கு மே 1 ஆம் தேதி மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பலத்த காற்றுடன் மின்னல் ஏற்பட்டதால் நிச்சயம் மழை பெய்யும்.
வெப்பம் தணியும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். குளிர்ந்த காற்று வீசியது. மழை வருவதற்காக அறிகுறியாக தெரிந்தாலும் மழை பெய்யாமல் மேகங்கள் கலைந்தது. இதனால் நீண்ட நேரமாக மழையை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
