/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.பி.பட்டினம் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியர் நியமிக்க முடிவு
/
எஸ்.பி.பட்டினம் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியர் நியமிக்க முடிவு
எஸ்.பி.பட்டினம் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியர் நியமிக்க முடிவு
எஸ்.பி.பட்டினம் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியர் நியமிக்க முடிவு
ADDED : ஆக 21, 2025 11:08 PM
திருவாடானை: எஸ்.பி.பட்டினம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பள்ளி மேலாண்மை குழு சார்பில் ஆசிரியர் நியமிக்க முடிவு செய்யப்பட்டதால் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. 110 மாணவர்கள் படிக்கின்றனர். ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டது.
இது குறித்து எஸ்.பி. பட்டினம் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் கூறுகையில், இப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கற்றல் திறன் வெகுவாக பாதிக்கப்படுகிறது. ஆக.,15ல் சுதந்திர தின விழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்த போது மாணவர்கள் தேசிய கீதத்தை தவறாக பாடினர்.
முழுமையான உச்சரிப்பும் இல்லை. மாணவர் களிடம் வாசிக்கும் திறனும், கணிதத் திறனும் வெகுவாக குறைந்துள்ளது. எனவே கூடுதல் ஆசிரியர் நியமித்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் கற்றல் திறன் குறைபாடுகளை கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றனர். இச் செய்தி தினமலர் நாளிதழில் நேற்று வெளியானது.
இதன் எதிரொலியாக நேற்று வட்டார கல்வி அலுவலர்கள் அப்பள்ளியில் ஆய்வு செய்தனர். அப்போது பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் கூடுதலாக ஆசிரியர் நியமனம் செய்ய முடிவு செய்தனர்.
இது குறித்து வட்டார கல்வி அலுவலர் கூறிய தாவது:
எஸ்.பி.பட்டினம் பள்ளி யில் நான்கு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பள்ளி மேலாண்மை குழு சார்பில் கூடுதலாக ஆசிரி யர் நியமிக்கப்படுவார் என்றனர். ஆசிரியர் நியமிக்கப்பட இருப்பதால் எஸ்.பி.பட்டினம் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.