/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டித்தர தீர்மானம்
/
முதுகுளத்துாரில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டித்தர தீர்மானம்
முதுகுளத்துாரில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டித்தர தீர்மானம்
முதுகுளத்துாரில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டித்தர தீர்மானம்
ADDED : அக் 18, 2024 04:57 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் அரசு ஊழியர்களுக்கு குடியிருப்புகள் அமைக்க வேண்டும், என வட்டக்கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
முதுகுளத்துாரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 15 வது வட்டக்கிளை மாநாடு நடந்தது. வட்டக் கிளை தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். செயலாளர் திருமுருகன் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் சூசைஅருள், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் காஜா நஜ்முதீன் முன்னிலை வகித்தனர். புதிய நிர்வாகிகளாக தலைவர் ராஜேஷ், செயலாளர் சுரேஷ்குமார் பொருளாளர் ஜெயகணேஷ், துணைத் தலைவர் பாரமலை, இணைச் செயலாளர் சூசைஅருள் ஆகியோர் தேர்வாகினர்.
கூட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியத்தில் உள்ள சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்புற நுாலகர்கள் அனைவருக்கும் உடனே ஊதியத்தை வழங்க வேண்டும். முதுகுளத்துாரில் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் அமைக்க வேண்டும். பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமர்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் செல்வகுமார் நன்றி கூறினார்.