/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி போராட முடிவு
/
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி போராட முடிவு
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி போராட முடிவு
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி போராட முடிவு
ADDED : ஜூன் 28, 2025 06:40 AM

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி டில்லியில் போராட்டம் நடத்துவோம் என டில்லி விவசாயிகள் போராட்ட குழு தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் ரஜ்விந்தர் சிங் தெரிவித்தார்.
ராமேஸ்வரத்தில் நேற்று மீனவர்கள் விவசாயிகள் இணைந்து நடத்திய கச்சத்தீவு மீட்பு மாநாடு நடந்தது. இதில் ரஜ்விந்தர் சிங் கூறியதாவது :
ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமான கச்சத்தீவை 1974ல் இலங்கையிடம் தாரைவார்த்த பின் இலங்கை கடற்படையால் பல ஆண்டுகளாக மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகுகின்றனர். இதற்கு தீர்வு காண மத்திய அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து மீண்டும் அதனை திரும்ப பெற வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கவும், இத்தீவில் வலைகளை உலர்த்தி மீனவர்கள் ஓய்வு எடுக்கவும் முடியும். இதனை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க மீனவர்களுடன், விவசாயிகளும் இணைந்து டில்லியில் போராட்டம் நடத்துவோம் என்றார்.