/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காங்., கட்சிக்கு சொந்தமான இடம் மீட்க முடிவு: தங்கபாலு ஆய்வு
/
காங்., கட்சிக்கு சொந்தமான இடம் மீட்க முடிவு: தங்கபாலு ஆய்வு
காங்., கட்சிக்கு சொந்தமான இடம் மீட்க முடிவு: தங்கபாலு ஆய்வு
காங்., கட்சிக்கு சொந்தமான இடம் மீட்க முடிவு: தங்கபாலு ஆய்வு
ADDED : ஜூலை 31, 2025 10:58 PM
திருவாடானை; திருவாடானையில் ஆக்கிரமிக்கப்பட்ட காங்., கட்சிக்கு சொந்தமான இடங்களை மீட்க மீட்பு குழு தலைவர் கே.வி.தங்க பாலு ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள காங்., கட்சியின் சொத்துக்களை மீட்க காங்., சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு குழு தலைவர் தங்கபாலு தலைமையில் குழு அமைக்கபட்டுள்ளது. ராமநாத புரம் மாவட்டத்தில் ஆய்வு செய்த இக்குழுவினர் திருவாடானைக்கு வந்தனர்.
திருவாடானை பஸ் ஸ்டாண்ட் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை தங்க பாலு தலைமையிலான குழுவினர் பார்வையிட்ட னர். திருவாடானை காங்., வட்டார தலைவர் கணேசன், நகர தலைவர் செந்தில்குமார் உடனிருந்த னர். காங்., கட்சி நிர் வாகிகள் கூறியதாவது:
காங்., கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சியை வளர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக் களை வழங்கியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் அந்த இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது.
காங்., கட்சியின் வளர்ச்சிக்காக அந்த இடங்களை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. திருவாடானை பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள இடத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.