/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எட்டு ஆண்டுக்கு பின் மாரியம்மன் கோயிலை நாளை திறக்க முடிவு
/
எட்டு ஆண்டுக்கு பின் மாரியம்மன் கோயிலை நாளை திறக்க முடிவு
எட்டு ஆண்டுக்கு பின் மாரியம்மன் கோயிலை நாளை திறக்க முடிவு
எட்டு ஆண்டுக்கு பின் மாரியம்மன் கோயிலை நாளை திறக்க முடிவு
ADDED : ஜூலை 15, 2025 03:33 AM
தொண்டி: தொண்டி புதுக்குடியில் எட்டு ஆண்டுகளாக பூட்டியிருக்கும் சந்தனமாரியம்மன் கோயிலை நாளை (ஜூலை 16) திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொண்டி புதுக்குடி கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது சந்தனமாரியம்மன் கோயில். 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக் கோயிலில் வரவு செலவு பார்ப்பது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் கோயில் பூட்டப்பட்டு திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சாவி ஒப்படைக்கப்பட்டது.
தற்போது அக்கிராமத்தை சேர்ந்த சிலர் கோயிலை திறக்க விருப்பம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் திருவாடானை தாசில்தார் ஆண்டி தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நாளை (ஜூலை 16) திறக்க முடிவு செய்யப்பட்டது.