/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் பத்திரப்பதிவு அலுவலக பணியாளர்கள் பணி புறக்கணிப்பு
/
ராமநாதபுரத்தில் பத்திரப்பதிவு அலுவலக பணியாளர்கள் பணி புறக்கணிப்பு
ராமநாதபுரத்தில் பத்திரப்பதிவு அலுவலக பணியாளர்கள் பணி புறக்கணிப்பு
ராமநாதபுரத்தில் பத்திரப்பதிவு அலுவலக பணியாளர்கள் பணி புறக்கணிப்பு
ADDED : பிப் 03, 2025 05:07 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பத்திரப்பதிவு பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இதனால் நேற்று எந்த பத்திரப்பதிவும் நடக்கவில்லை.
தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறைத்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தை மாத முகூர்த்தம் என்பதால் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று (பிப்., 2) பத்திரப்பதிவு நடைபெறும், என அறிவிப்பு செய்திருந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை பொங்கலுக்கான கூடுதல் விடுமுறை விடப்பட்டதால் பணிநாளாக செயல்படுத்தப்பட்டது. இந்த வாரம் சனிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது.
அதற்கு மாற்றாக இந்த வாரம் சனிக்கிழமை முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இரு வாரமாக 14 நாட்கள் விடுமுறை இல்லாமல் பத்திரப்பதிவு அலுவலர்கள் பணிபுரிந்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமையும் வேலை நாளாக அறிவித்ததால் அனைத்து மாவட்ட பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பணிகளை புறக்கணித்தனர். மாவட்டத்தில் பத்திரப்பதிவுகள் நடக்கவில்லை, இதனால் பதிவிற்காக முன்னேற்பாடுகளை செய்திருந்த மக்கள் பாதிக்கப்பட்டனர்.