/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செலவிற்கேற்ற லாபம் இல்லாததால் சுணங்கிய ஆழ்கடல் மீன் பிடி திட்டம்
/
செலவிற்கேற்ற லாபம் இல்லாததால் சுணங்கிய ஆழ்கடல் மீன் பிடி திட்டம்
செலவிற்கேற்ற லாபம் இல்லாததால் சுணங்கிய ஆழ்கடல் மீன் பிடி திட்டம்
செலவிற்கேற்ற லாபம் இல்லாததால் சுணங்கிய ஆழ்கடல் மீன் பிடி திட்டம்
ADDED : ஏப் 27, 2025 03:14 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி, மன்னார்வளைகுடா பகுதியில் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதால் ஆழ்கடல் மீன் பிடிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. போதிய லாபம் இல்லாததால் மீனவர்கள் ஆர்வமின்றி திட்டம் சுணங்கியுள்ளது.
பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் மீன்வளம் குறைவாக இருப்பதால் மீனவர்கள் அதிக துாரம் செல்லும்போது எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர். படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதற்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஆழ்கடல் மீன் பிடி திட்டத்தை செயல்படுத்தின.
ஆழ்கடல் பகுதியில் 10 நாட்களுக்கு மேல் கடலில் தங்கி டூனா வகை மீன்கள் பிடிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதில் ஆழ்கடல் மீன் பிடி படகு 80 லட்சம் ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்டது. இதில் 50 சதவீதம் மத்திய அரசும், 20 சதவீதம் மாநில அரசும் மானியமாக வழங்கும்.
மீனவர்கள் தனது பங்களிப்பாக 10 சதவீதமும், வங்கி கடன் 20 சதவீதம் வழங்கப்பட்டது. இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 42 ஆழ்கடல் படகுகள் தயாரிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த படகுகளை கொச்சி துறைமுகத்தில் நிறுத்த வேண்டியிருப்பதாலும், போதுமான வேலையாட்கள் கிடைக்காததாலும் போதுமான லாபம் கிடைக்கவில்லை. இதனால் மீனவர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆழ்கடல் மீன் பிடிப்பு திட்டம் கைவிடப்பட்டுள்ளது.