ADDED : மே 26, 2025 09:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் உலக நன்மை வேண்டி தீப ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நவக்கிரகங்களுக்கு சிவாச்சாரியார்களால் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்யப்பட்டது.
பின்னர் மாரியூர், கீழக்கரை, சேதுக்கரை, தேவிபட்டினம் அரியமான், வில்லுண்டி தீர்த்தம் ஆகியவற்றிற்கு உட்பட்ட அடியார்களும், ராமேஸ்வரம் ராமசேது மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி குழுவினரும், சிறப்பு தீப வழிபாட்டில் ஈடுபட்டனர்.
நவபாஷாணத்திற்கு வந்திருந்த பக்தர்கள் தீப வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.