தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சோளப்பயிர்களை சேதப்படுத்திய மான்கள்

சோளப்பயிர்களை சேதப்படுத்திய மான்கள்

சோளப்பயிர்களை சேதப்படுத்திய மான்கள்


ADDED : ஜன 10, 2025 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2025 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கமுதி: கமுதி அருகே பறையங்குளம் கிராமத்தில் செழித்து வளர்ந்துள்ள சோளப் பயிர்களை மான்கள் சேதப்படுத்தின.

கமுதி அருகே பறையங்குளம் கிராமத்தில் 200 ஏக்கருக்கும் மேல் நெல், மிளகாய், சோளம், கம்பு உள்ளிட்ட சிறுதானியப் பயிர்கள் விவசாயம் செய்கின்றனர்.

பருவமழை பொய்த்ததால் நெல், மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டது. சிறுதானியப் பயிர்களுக்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானதால் கம்பு, சோளப் பயிர்கள் தற்போது நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இரவு நேரங்களில் மான்கள் கூட்டமாக வந்து சோளப் பயிர்களை சேதப்படுத்துகின்றன. தற்போது பயிரிடப்பட்டுள்ள சோளப் பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது.

இதனால் நன்கு வளர்ச்சி அடைந்த பயிர்கள் வீணாகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us