/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வறட்சியால் இரை தேடி மான்கள் தவிப்பு குடியிருப்புகளில் நுழையும் அவலம்
/
வறட்சியால் இரை தேடி மான்கள் தவிப்பு குடியிருப்புகளில் நுழையும் அவலம்
வறட்சியால் இரை தேடி மான்கள் தவிப்பு குடியிருப்புகளில் நுழையும் அவலம்
வறட்சியால் இரை தேடி மான்கள் தவிப்பு குடியிருப்புகளில் நுழையும் அவலம்
ADDED : ஜூலை 28, 2025 03:44 AM
சாயல்குடி : ராமநாதபுரம் மாவட்டம் போகலுார், நயினார்கோவில், கமுதி, முதுகுளத்துார், பரமக்குடி, திருவாடானை, சாயல்குடி, கடலாடி வனச்சரகத்திற்குட்பட்ட கடுகுச்சந்தை, செவல்பட்டி, எஸ்.தரைக்குடி, கடலாடி கண்மாய், மலட்டாறு, மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் புள்ளிமான்கள் வசிக்கின்றன.
தற்போது தொடரும் வறட்சியால் பெருவாரியான ஊருணி, கண்மாய், நீர் நிலைகளில் தண்ணீர் வற்றிவருகிறது. இந்நிலையில் தண்ணீருக்காக அலைபாயும் புள்ளிமான்கள் ஆள் நடமாட்டமில்லாத வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளில் புகுந்து விடுகின்றன. நாய்களிடம் சிக்கியும் தவிக்கின்றன. இரவில் புள்ளிமான்கள் கிழக்கு கடற்கரை சாலையை கடக்கும் போது வாகனங்களில் சிக்கியும் பலியாகின்றன.
நேற்று காலை கடுகுச்சந்தை அருகே 2 வயது ஆண் மான் தண்ணீர் தேடி வந்தது. அங்கிருந்த பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் துரத்தியதில் மான் அங்கிருந்த கம்பிவேலியில் தலை சிக்கி உயிருக்கு போராடியது. தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் மீட்பு குழுவினர் விரைந்து புள்ளி மானை பத்திரமாக மீட்டு சாயல்குடி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். புள்ளி மான்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் தொட்டி, குட்டைகளையும் அமைக்க மாவட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.