
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே தளிர்மருங்கூர் கண்மாயில் மான்கள் கூட்டமாக வசிக்கின்றன. நேற்று அதிகாலை கண்மாயிலிருந்து வெளியேறிய இரண்டு வயதுள்ள பெண் புள்ளி மான் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றது.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் பலியானது. வனத்துறையினர் சென்று மானை மீட்டு, கால்நடை டாக்டர் பரிசோதனைக்கு பின் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்தனர்.