ADDED : மே 07, 2025 01:48 AM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே சித்தாமங்கலம் கண்மாயில் மான்கள் கூட்டமாக வசிக்கின்றன. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கண்மாயிலிருந்து வெளியேறிய இரண்டு வயதுள்ள பெண் புள்ளிமான் சித்தாமங்கலம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
மானை பார்த்த வெறிநாய்கள் விரட்டி கடித்ததில் மான் இறந்தது. வனத்துறையினர் மானை மீட்டு கால்நடை டாக்டர் பரிசோதனைக்கு பின் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்தனர்.
