ADDED : ஜூலை 08, 2025 10:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை; திருவாடானை அருகே கடம்பூர் கண்மாய்க்குள் ஏராளமான மான்கள் வசிக்கின்றன.
நேற்று அதிகாலை கண்மாயிலிருந்து வெளியேறிய இரண்டு வயது பெண் புள்ளிமான் குருந்தங்குடி கஸ்பார் நகர் குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. மானை பார்த்த நாய்கள் விரட்டி கடித்ததில் மான் இறந்தது. வனத்துறையினர் உடல் பரிசோதனைக்கு பின் புதைக்கப்பட்டது.