ADDED : செப் 25, 2026 06:20 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே கோவனி கண்மாயில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. நேற்று காலை 2 வயதுள்ள ஒரு பெண் புள்ளிமான் கண்மாயிலிருந்து வெளியேறி திருச்சி–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காலில் காயத்துடன் சாலை ஓரத்தில் கிடந்தது.
வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் சென்று நடமாடும் கால்நடை மருத்துவ குழுவிற்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து டாக்டர்கள் சென்று காயமடைந்த மானுக்கு சிகிச்சையளித்தனர். அதன்பின் வனத்துறையினர் முன்னிலையில் கண்மாய்க்குள் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக விடப்பட்டது.
