ADDED : ஆக 07, 2025 08:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவரும் கிருஷ்ணசாமியின் மகனுமான ஷியாம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். மாவட்ட தலைவர் சசிக்குமார் கூறியதாவது:
அண்மையில் திருநெல்வேலியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் அவதுாறாக பேசியுள்ளார். இது சம்பந்தமான வீடியோ பரவுகிறது. கலவரத்தை துாண்டும் வகையில் பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.