/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பட்டம் வினாடி-வினா: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
/
பட்டம் வினாடி-வினா: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
பட்டம் வினாடி-வினா: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
பட்டம் வினாடி-வினா: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
ADDED : நவ 15, 2024 06:43 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் பாரதிநகர் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழில் இருந்து வினாடி வினா மற்றும் எழுத்துத் தேர்வு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று காலை பள்ளியில் நடந்தது. கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலப்பிரிவு துணை கலெக்டர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். முதல்வர் சாந்தினி வரவேற்றார்.
ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள் சுகன்யா தேவி, ஏஞ்சல் செலின், போட்டியில் வென்ற மாணவர்கள் சாதனா ஸ்ரீ, லார்ஜ தர்ஷினி, கோகுல வாசன், தருண் சீதரன் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசுகளும், புத்தகம் வழங்கப்பட்டது.
பட்டம் இதழின் சிறப்பம்சங்கள் குறித்து மாணவர்களிடையே விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.