/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஸ்கேன் ரிப்போர்ட் பெறுவதில் தாமதம்
/
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஸ்கேன் ரிப்போர்ட் பெறுவதில் தாமதம்
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஸ்கேன் ரிப்போர்ட் பெறுவதில் தாமதம்
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஸ்கேன் ரிப்போர்ட் பெறுவதில் தாமதம்
ADDED : அக் 31, 2024 01:14 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் ஸ்கேன் ரிப்போர்ட் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரம் அரசுமருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 700 க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். சிறப்பு பிரிவுகளான எலும்பு முறிவு, தலைக்காய சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு, பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை பிரிவு, இதய பிரிவு, குழந்தைகள் சிறப்பு பிரிவு, மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு என பல்வேறு சிறப்பு பிரிவுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுக்க சிறப்பு பிரிவு டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தினசரி 15 எம்.ஆர்.ஐ., ஸ்கேன், 200 சி.டி.ஸ்கேன், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு எடுக்கப்படுகிறது.
இந்த ஸ்கேன் ரிப்போர்ட் தயாரிக்கும் டாக்டர்களில் இருவர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். அதில் பெண் டாக்டர் பேறுகால விடுப்பில் செல்லவுள்ளார். அப்படி சென்றுவிட்டால் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே ஸ்கேன் பிரிவில் இருப்பார். இவர் 24 மணி நேரமும் பணி செய்ய முடியாத நிலையில் தினமும் எடுக்கப்படும் ஸ்கேன்களின் ரிப்போர்ட்டுகள் அடுத்த நாளில் தான் நோயாளிகளுக்கு வழங்கப்படும்.
மதியம் 2:00 மணிக்கு மேல் ஸ்கேன் ரிப்போர்ட் வழங்கப்படுவதில்லை. இதனால் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை செய்ய முடியாத நிலையில் டாக்டர்கள் சிரமப்படுகின்றனர்.
நோயாளிகளும் உரிய சிகிச்சை கிடைக்காமல் தவிக்கின்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து போதுமான டாக்டர்கள் நியமிக்க வேண்டும்.