/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டில்லி கார் குண்டு வெடிப்பு : போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
/
டில்லி கார் குண்டு வெடிப்பு : போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
டில்லி கார் குண்டு வெடிப்பு : போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
டில்லி கார் குண்டு வெடிப்பு : போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
ADDED : நவ 11, 2025 11:28 PM

ராமநாதபுரம்: தலைநகர் டில்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தையொட்டி ராமநாதபுரத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது. தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பகுதிகள், கோயில்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் முக்கிய சுற்றுலாதலமாக விளங்குவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து செல்கின்றனர்.
இதனால் ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், ராமநாதபுரம் ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.பி., சந்தீஷ் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் முக்கிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.