/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டெலிவரி ஊழியர் ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்
/
டெலிவரி ஊழியர் ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்
டெலிவரி ஊழியர் ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்
டெலிவரி ஊழியர் ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்
ADDED : ஜூலை 26, 2025 11:34 PM
ராமநாதபுரம்: டெலிவரி ஊழியர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் குலசேகரன் தெரிவித்துள்ளளார்.
தமிழ்நாடு அமைப்புசாரா டிரைவர்கள், தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண்கள், திருநங்கைகளுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப் படுகிறது.
அதே போன்று அமேசான், பிளிப்கார்ட், சொமட்டோ, மீசோ போன்ற இணையம் சார்ந்த கிக் நிறுவனங்களில் டெலிவரி வேலை செய்பவர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப் படவுள்ளது.
நலவாரியத்தில் பதிவு பெற்ற டெலிவரி ஓட்டுநர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து மானியம் பெறலாம். கூடுதல் தகவலுக்கு ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையகரத்தை தொடர்புக் கொள்ளுமாறு உதவி ஆணையர் குல சேகரன் தெரிவித்துள்ளார்.