/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொடர் மழையால் நீரில் மூழ்கி 1000 ஏக்கரில் பயிர்கள் சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை

ADDED : டிச 17, 2024 03:44 AM

கமுதி: தொடர் மழையால் கமுதி தாலுகாவில் 1000 ஏக்கருக்கும் மேல் நெல், மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கமுகி வட்டாரத்திற்கு உட்பட்ட பசும்பொன், கோட்டைமேடு, கோவிலாங்குளம், கீழராமநதி, புதுக்கோட்டை, மண்டலமாணிக்கம் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல், மிளகாய், வாழை சாகுபடி செய்துள்ளனர். பருவ மழை தவறி பெய்ததால் பயிர்கள் வளர்ச்சி குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தற்போது கமுகி வட்டாரத்தில் சில நாட்களாக மழை பெய்தது.
கமுதி அருகே கீழராமநதி, ராமசாமிபட்டி, கோரைபள்ளம், கே.எம்.கோட்டை, காவடிப்பட்டி, நீராவி கரிசல்குளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல், மிளகாய், தக்காளி உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
கோரைபள்ளம் விவசாயி ராமர் கூறுகையில், மழையால் கமுதி வட்டாரத்தில் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நெல், மிளகாய், தக்காளி உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கலெக்டர் உள்ளிட்ட வேளாண் துறை அதிகாரிகள் கிராமங்களில் நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.