/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடி பஸ் ஸ்டாண்டிற்குள் இரவில் பஸ் வர கோரிக்கை தொடர் போக்குவரத்து நெரிசல்

ADDED : ஜூன் 30, 2025 04:13 AM
கடலாடி : கடலாடி பஸ் ஸ்டாண்டிற்குள் இரவு நேரத்தில் பஸ்கள் முறையாக உள்ளே வந்து செல்வதில்லை என பயணிகள் தெரிவித்தனர்.
கடலாடி பஸ் ஸ்டாண்டிற்குள் ஏராளமான கடைகள் உள்ளன. அப்பகுதியில் உள்ள டீக்கடைகளில் இருந்து கழிவு நீரை பஸ் ஸ்டாண்டில் விடும் போக்கு தொடர்கிறது. பயணிகள் கூறியதாவது:
கடலாடி தேவர் சிலை மற்றும் எம்.ஜி.ஆர்., சிலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. ரோட்டில் இருபுறங்களிலும் வாடகை வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முதுகுளத்துார், சாயல்குடி உள்ளிட்ட பகுதியில் இருந்து வரக்கூடிய அரசு பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் இரவு நேரங்களில் வராமல் அப்படியே பிரதான சாலையை பயன்படுத்தி செல்கின்றனர்.
எனவே கடலாடி யூனியன் நிர்வாகத்தினர் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் ஆக்கிரமிப்பு கடைகளை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டும் என்றனர்.