/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பள்ளிகளில் பராமரிப்பு நிதியை முறையாக செலவிடக் கோரிக்கை
/
அரசு பள்ளிகளில் பராமரிப்பு நிதியை முறையாக செலவிடக் கோரிக்கை
அரசு பள்ளிகளில் பராமரிப்பு நிதியை முறையாக செலவிடக் கோரிக்கை
அரசு பள்ளிகளில் பராமரிப்பு நிதியை முறையாக செலவிடக் கோரிக்கை
ADDED : ஏப் 13, 2025 04:16 AM
திருப்புல்லாணி : திருப்புல்லாணி, ஏர்வாடி, சிக்கல், கடலாடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் முறையாக பராமரிப்பு நிதியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கட்டடங்கள் வர்ணம் பூசாமல் கருமை சூழ்ந்து சேதம் அடைந்து காணப்படுகிறது. மழை காலங்களில் மழை நீர் உட்புகுவதால் சிமென்ட் பூச்சுக்கள் பெயர்ந்து விழுகிறது. அவற்றை முறையாக பராமரிப்பு பணிகள் செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட தொடக்கப்பள்ளி முதல் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி வரை அரசு கட்டடங்களை பள்ளி விடுமுறை காலங்களில் மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பல பள்ளிகளில் மைதானங்கள் பராமரிப்பின்றி புதர் மண்டியும் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது.
மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் விதமாகவும் அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் பள்ளியை முறையாக நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்த ஆபத்து விளைவிக்கக்கூடிய நிலையில் உள்ள பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து அவற்றிற்கான அறிக்கையை தயார் செய்து அனுப்ப வேண்டும். பராமரிப்பு பணிகள் முறையாக பள்ளி மேலாண்மைக் குழுவின் மேற்பார்வையில் நடக்க வேண்டும்.
அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க அரசியல் தலையீடு இல்லாத ஒப்பந்ததாரர்கள் மூலமாக சேதமடைந்த பள்ளி கட்டடங்களை உரிய முறையில் சீரமைக்க வேண்டும்.
விடுமுறை காலங்களில் மேற்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும். இதற்கான நடவடிக்கையை கல்வித் துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

