/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சத்திரக்குடியில் போக்குவரத்து நெரிசல் ரோட்டோரம் முறைப்படுத்த கோரிக்கை
/
சத்திரக்குடியில் போக்குவரத்து நெரிசல் ரோட்டோரம் முறைப்படுத்த கோரிக்கை
சத்திரக்குடியில் போக்குவரத்து நெரிசல் ரோட்டோரம் முறைப்படுத்த கோரிக்கை
சத்திரக்குடியில் போக்குவரத்து நெரிசல் ரோட்டோரம் முறைப்படுத்த கோரிக்கை
ADDED : நவ 12, 2024 04:53 AM

பரமக்குடி: பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் சத்திரக்குடி அமைந்துள்ள நிலையில் இங்கு ரோட்டின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து மக்கள் அவதிப்படுகின்றனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையாக உள்ள நிலையில் அதன் பின் ராமநாதபுரத்திற்கு இருவழிச்சாலை செல்கிறது. இதனால் பரமக்குடி- சத்திரக்குடி இடையே அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.
சத்திரக்குடியில் உள்ள பல நுாறு கடைகளில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நுாறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். மேலும் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை சந்தை செயல்படுகிறது.
சத்திரக்குடி ரோடு விரிவு படுத்தப்பட்ட நிலையில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு உள்ளதுடன், வாகனங்களையும் நிறுத்துகின்றனர். இதனால் ராமநாதபுரம் மற்றும் மதுரை நோக்கி செல்லும் பஸ்கள் நிறுத்த இடமின்றி உள்ளது.
சத்திரக்குடியில் மேல்நிலைப்பள்ளி உட்பட வங்கிகள், அரசு நிறுவனங்கள் செயல்படுகிறது. ஆகவே நெரிசலை குறைக்கவும், விபத்துகளை தவிர்க்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனங்களை முறைப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.