/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அமைச்சர் பொன்முடி பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தல்
/
அமைச்சர் பொன்முடி பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தல்
ADDED : ஏப் 16, 2025 08:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஹிந்து பாரத முன்னணி மாநில செயலாளர் ஹரிதாஸ் சர்மா ஹிந்துக்கள் குறித்து கீழ்த்தரமாக பேசியதை கண்டித்து அமைச்சர் பொன்முடியின் படத்தை செருப்பால் அடித்தும், தீயிட்டு எரித்தும் கோஷமிட்டார்.
அதன் பிறகு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதில் தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சைவ, வைணவ சமய நம்பிக்கையை மிகவும் கீழ்த்தரமாக விலைமாதுடன் ஒப்பிட்டு பேசி ஹிந்துக்கள் மனதை புண்படுத்தியுள்ளார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

