/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குருந்தங்குடி டாஸ்மாக் கடையை மூட கோரிக்கை
/
குருந்தங்குடி டாஸ்மாக் கடையை மூட கோரிக்கை
ADDED : நவ 25, 2024 07:02 AM
திருவாடானை : திருவாடானை அருகே குருந்தங்குடியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
திருவாடானை அருகே குருந்தங்குடியில் பஸ்ஸ்டாப் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. மேலும் ஆஞ்சநேயர் கோயிலும் உள்ளது.
வெளியூர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த பஸ்ஸ்டாப்பிற்கு சென்று பஸ் ஏறி செல்கின்றனர்.
இதில் போதை ஆசாமிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. சிலரின் ஆபாச பேச்சுகளால் மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சில நாட்களுக்கு முன்பு இக் கடை முன்பு இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.
நாளுக்கு நாள் மது அருந்துபவர்களின் தொல்லை அதிகரித்து வருவதால் டாஸ்மாக் கடையை உடனடியாக மூடவேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.