/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நுாறு சதவீதம் பார்வையற்றவர்களை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை

ADDED : அக் 16, 2025 05:14 AM

ராமநாதபுரம்: நுாறு சதவீதம் பார்வையற்றவர்களை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், பார்வை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு கிளை சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அக்.,15 உலக வெண்கோல்(ஸ்டிக்) தினத்தை முன்னிட்டு கோரிக்கை முறையீடு நிகழ்ச்சி நடந்தது.
சங்கத்தின் கிளை செயலாளர் கருப்பையா தலைமை வகித்தார். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், துணை செயலாளர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
நுாறு சதவீதம் பார்வையற்றவர்களை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசு காலி பணியிடங்களில் 1 சதவீதம் குறிப்பாக வங்கி, கல்விப்பணியில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
சாலைகளை கடக்கும் இடங்களில் ஒலி அறிவிப்பு களை உறுதிப்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்ப பயிற்சியோடு லேப்டாப், ஸ்மார்ட்போன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் பிறகு கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.