/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிக்கு பயிர் கடன் ரூ.2 லட்சம் வழங்க வலியுறுத்தல்
/
விவசாயிக்கு பயிர் கடன் ரூ.2 லட்சம் வழங்க வலியுறுத்தல்
விவசாயிக்கு பயிர் கடன் ரூ.2 லட்சம் வழங்க வலியுறுத்தல்
விவசாயிக்கு பயிர் கடன் ரூ.2 லட்சம் வழங்க வலியுறுத்தல்
ADDED : டிச 23, 2024 04:50 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கி, சங்கங்களில் அதிகபட்சமாக தனிநபர் விவசாயக்கடன் ரூ.2 லட்சம் வரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட காவிரி,வைகை,கிருதுமால்,குண்டாறு இணைப்புக் கால்வாய் நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் மலைச்சாமி தலைமையில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூட்டுறவு கடன் சங்கம், வங்கிகளில் விவசாயிகளுக்கு தனி நபர் கடனாக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் பயிர் கடன் ரூ.2 லட்சம் வழங்க உத்தரவு வந்துள்ளது. அதனை ராமநாதபுரம் மாவட்டத்திலும் அமல்படுத்த வேண்டும்.
காட்டுப்பன்றிகள் விளை நிலத்தை அழிப்பதோடு மனிதர்களை தாக்கு கின்றன.
எனவே கேரள மாநிலம் போன்று வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுபன்றியை நீக்குவதற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்.
சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும். புயல், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.