/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணி ஒன்றிய கிராமங்களில் தடுப்பணைகளை சீரமைக்க கோரிக்கை அரசு நிதி வீணடிப்பை தவிருங்கள்

ADDED : செப் 21, 2024 05:28 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் பயனற்ற தடுப்பணைகளை சீரமைத்து அரசு நிதி வீணடிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகள் உள்ளன.இங்கு 2019 முதல் 2022 வரை நுாறுக்கும் மேற்பட்ட தடுப்பணைகள் காலங்காலமாக நீரோடும் வழித்தடங்களில் தேவைப்படும் இடங்களில் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பல விவசாய நில நீர்வழித்தடத்திலும், விவசாயத்திற்கு நீர் செல்வதற்கு இடையூறாகவும் உள்ளன.
இங்கு ரூ.5 லட்சம் முதல் 12 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் பக்கவாட்டில் தண்ணீர் சேமிப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பெயரளவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளால் எவ்வளவு மழை பெய்தாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் மட்டுமே சேமிக்க முடிகிறது. பெருவாரியான நீர் பக்கவாட்டில் உடைந்து வெளியேறுவது தொடர்கிறது.
தடுப்பணை கட்டப்பட்டவுடன் அவற்றை உரிய முறையில் பராமரிப்பு செய்யாமலும் நீர் வழித்தடங்களில் சீமைக் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் திட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாகி உள்ளது. அரசு நிதியும் வீணடிக்கப்படுகிறது. விவசாயிகள் கூறியதாவது:
தடுப்பணையின் நோக்கம் அப்பகுதி மழை நீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்கவும் விளை நிலங்களின் அருகே தண்ணீர் சேமித்து வைக்கவும், நிலத்தடி நீரை பாதுகாப்பதும் தான். மழைக் காலங்களில் பெருவாரியான தடுப்பணைகள் சேதமடைந்துள்ளன.
தரமற்று கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் மராமத்து பணிகளை செய்து பக்கவாட்டுக்கரைப்பகுதிகளை பலப்படுத்தியும் வரத்து கால்வாயை துார்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.