/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை
/
சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை
சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை
சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை
ADDED : டிச 06, 2024 05:17 AM
சாயல்குடி: சாயல்குடியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படும் நிலையில் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாள்தோறும் காய்ச்சல், இருமல், ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட நோய்களுக்காக பரிசோதனை செய்யவும் சிகிச்சை அளிக்கவும் 200க்கும் அதிகமான புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். கர்ப்பிணிகள் தொடர் பரிசோதனைக்கும், பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
சாயல்குடி பேரூராட்சி பகுதியில் வசிப்போர் மட்டுமல்லாது கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர்.
இந்நிலையில் விபத்தில் பாதிக்கப்படுவோரும் அவசர சிகிச்சைக்காக சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரும் போது முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கடலாடி தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.
அங்கு கொண்டு செல்லும் அவர்களை சில மணி நேரம் அங்கு சிகிச்சை அளித்த பின் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்புவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீண் அலைச்சலும், கால விரயமும் உடனடி சிகிச்சை கிடைப்பதில் குறைபாடும் ஏற்படுகிறது. சாயல்குடி தன்னார்வலர் கே.பாஸ்கரன் கூறியதாவது: கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சிகிச்சைக்காக வருகை தரும் நிலையில் கூடுதல் டாக்டர் மற்றும் செவிலியர் பற்றாக்குறை நிலை உள்ளது.
எனவே அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தும் பட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கூடுதல் வீண் அலைச்சல் தவிர்க்கப்படும். எனவே பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.