
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : பார்லிமென்ட் கூட்டத் தொடரில் அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித்ஷா இழிவுபடுத்தியதாக கூறி ஆர். எஸ்.மங்கலத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்டச் செயலாளர் ஜிப்ரி, த.மு.மு.க., மாவட்டச் செயலாளர் ஜாவித் அஸ்லாம், தமிழ் புலிகள் கட்சி மாநில செயலாளர் தமிழ் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

