நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் துப்புரவு பணிக்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளது. இதில் பணிபுரியும் வட மாநில துப்புரவு பணியாளர்களை அடிப்படை வசதி இல்லாத தகர சீட்டு கொட்டகையில் நகராட்சி நிர்வாகம் தங்க வைத்துள்ளது.
துப்புரவு பணியாளர்களின் உழைப்பை சுரண்டி உரிய சம்பளம் வழங்காமல் முறைகேடு நடப்பதால் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி நேற்று ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் குருவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் காசிநாததுரை, கருணாகரன், சிவா, ஜஸ்டின் உட்பட பலர் பங்கேற்றனர்.

