/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 09, 2024 12:24 AM

ராமநாதபுரம் : -மதுரை மாவட்டம் மேலுார்அருகே சேக்கிபட்டியை சேர்ந்த மக்களை தேடி மருத்துவம்திட்ட ஊழியர் தனலெட்மி தாக்கப்பட்டதை கண்டித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் லில்லிபாக்கியம் தலைமை வகித்தார்.நிர்வாகி காளீஸ்வரி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மண்டபம் ராஜேஸ்வரி, திருப்புல்லாணி ராதா, பார்த்திபனுார் சீதாலட்சுமி, முதுகுளத்துார் தேன்மொழி உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலுார் சேக்கிபட்டி ஆரம்ப சுகாதார நிலைய மக்களைத் தேடி மருத்துவ பணியாளர் தனலெட்சுமி, அவரது கணவர் மீது வன் கொடுமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை கண்டித்தும், நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.