/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 09, 2024 12:36 AM
ராமேஸ்வரம் : - தமிழகத்தில் வெள்ள பாதிப்பிற்கு உரிய நிவாரணம் வழங்காத மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து ராமேஸ்வரத்தில் இந்திய கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பிற்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், வெள்ள பாதிப்பில் அரசியல் ஆதாயம் தேடும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்தும் நேற்று ராமேஸ்வரத்தில் தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நகர் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச் செயலாளர் ராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜீவானந்தம், நிர்வாகிகள் வடகொரியா, செந்தில் ஜோதிபாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.