ADDED : மார் 15, 2024 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : -பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் தி.மு.க., மகளிர் அணி சார்பில், மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சனம் செய்த நடிகை குஷ்புவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது.
பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சேதுகருணாநிதி முன்னிலை வகித்தார். அப்போது மகளிர் உரிமை தொகை குறித்து விமர்சனம் செய்த நடிகை குஷ்புவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். குஷ்பு உருவப் படத்தை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். நகராட்சி முன்னாள் கவுன்சிலர் செல்வி, கவுன்சிலர் ஜீவரத்தினம் கவுன்சிலர்கள், மகளிர் அணியினர் பங்கேற்றனர்.

