/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்
/
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 01, 2024 06:52 AM
பரமக்குடி : -பரமக்குடியில் மக்கள் பாதை அமைப்பு சார்பில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மக்கள் பாதை அமைப்பு நிர்வாகி ராவணன் குமார் தலைமை வகித்தார். சரவணகுமார், கிளாட்வின் பகத்சிங் முன்னிலை வகித்தனர். தினேஷ் வரவேற்றார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது. விவசாய நிலங்களை பாதுகாக்கும் வகையில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும்.
திட்டம் 250க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. சிறிய பரப்பில் 250 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுத்தால் விவசாயம், மீன்பிடி மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தொடர்ந்து மக்கள் போராட்டத்திற்கு தயாராவார்கள் என தெரிவித்தனர். வீரக்குமார் நன்றி கூறினார்.