/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷன் பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 14, 2024 03:31 AM

ராமநாதபுரம்: தமிழ்நாடு ரேஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் தினகரன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் ஞானசேகரன், முன்னிலை வகித்தனர். பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை அமைக்க வேண்டும். அனைவருக்கும் குறைந்த பட்சம் ரூ.5500 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
உணவுப்பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையாக கூட்டுறவு ரேஷன் கடைகளில் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்டப் பொருளாளர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

