/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
/
மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 26, 2024 04:59 AM

ராமேஸ்வரம்: -இலங்கைச் சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரத்தில் 4 விசைப்படகுகளில் பொருத்திய அதிக குதிரை திறன் கொண்ட சீனா இன்ஜின்களை அகற்றவும்,இலங்கையில் சிறை தண்டனை பெற்ற 50க்கு மேலான மீனவர்களையும், சமீபத்தில் கைதான 16 மீனவர்கள் மற்றும் விடுபட்ட 20க்கு மேலான படகிற்கு தமிழக அரசு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கிட கோரிநேற்று ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர்கள் சேசு, சகாயம், எமரிட் மற்றும் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் பங்கேற்றனர்.