/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி நெசவாளர் கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 11-ல் ஆர்ப்பாட்டம்
/
பரமக்குடி நெசவாளர் கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 11-ல் ஆர்ப்பாட்டம்
பரமக்குடி நெசவாளர் கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 11-ல் ஆர்ப்பாட்டம்
பரமக்குடி நெசவாளர் கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 11-ல் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 06, 2024 04:27 AM

பரமக்குடி, : -பரமக்குடி, எமனேஸ்வரம் அனைத்து கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் மார்ச் 11ல் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி, எமனேஸ்வரம் அனைத்து கைத்தறி நெசவாளர் சொசைட்டிகளின் உறுப்பினர்களின் பெடரேசன் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது.
இவர் சேஷய்யன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் கோவிந்தன், விஸ்வநாதன், நாகநாதன் முன்னிலை வகித்தனர்.
துணை செயலாளர் நாகராஜன் வரவேற்றார். செயலாளர் கோதண்டராமன் தீர்மானங்களை வாசித்தார்.
அப்போது கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு வழங்க வேண்டிய ரிபேட் தொகையை உடனே வழங்க வேண்டும். கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு தொழில் உற்பத்தி பாதிக்காத வகையில் பட்டு நுால் அனுமதி உதவி கைத்தறி இயக்குனர் அனுமதி பெற்று கொள்முதல் செய்ய வேண்டும், என்ற நிலையை மாற்றி சங்கங்களே தீர்மானம் நிறைவேற்றி கச்சா பொருட்களை கொள்முதல் செய்ய துறை அனுமதி அளிக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி மார்ச் 11 காலை 10:00 மணிக்கு பரமக்குடியில் உள்ள கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
நிர்வாகிகள் முரளி, குப்புசாமி, குமார், நாகராஜன் கலந்து கொண்டனர்.
பொருளாளர் கணேஷ் பாபு நன்றி கூறினார்.

