UPDATED : அக் 14, 2026 07:34 PM
ADDED : அக் 14, 2026 07:18 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முனியராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சரவணக்குமார் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் விஜயகுமார் 18 அம்ச கோரிக்கை வலியுறுத்தி பேசினார். மாநில தணிக்கையாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் அருள் முனியப்பதாஸ், பொருளாளர் மன்சூர், மாநில செயற்குழு உறுப்பினர் திருமுருகன் பங்கேற்றனர். ––
