ADDED : அக் 21, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பெருங்குளம் அல்கலம் சர்வதேசப்பள்ளியில் டெங்கு, போதைப்பொருள் தடுப்பு, அயோடின் குறைபாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி சுகாதாரத்துறையினரால் நடத்தப்பட்டது.
அல்கலம் கல்வி குழும தலைவர் ேஷக் அப்துல் குத்துாஸ் அஸ்ஹாரியின் வழிகாட்டுதலின் படி பொது சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறையினர் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் அப்துல் ரகுமான், முதல்வர் மெஹபூப் நிஷா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன், உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல் ஆகியோர் மாணவர்களுக்கு போதைப்பொருட்களின் தீமைகள், உணவு பாதுகாப்பு முறைகள், அயோடின் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர். மழைக்காலத்தில் டெங்கு தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

