தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி


ADDED : ஆக 27, 2026 06:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 06:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடந்தது. டாக்டர் அஸ்வின் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், சிகிச்சை அளிக்கும் முறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கை, கொசு உற்பத்தியை தடுப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறியாக அதிகப்படியான காய்ச்சல், தலைவலி, கண்களுக்கு பின்னால் கடுமையான வலி, மூட்டு, தசை வலி, வாந்தி, உடல் சோர்வு, தோல் வெடிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். எனவே அறிகுறிகள் தென்பட்டால் அரசு மருத்துவமனையில் டாக்டரிடம் ஆலோசித்து சிகிச்சை பெற வேண்டும் என்றார்.

உடன் தலைமை செயலியர்கள் சண்முகவள்ளி, இளங்கோவன் உட்பட செவிலியர்கள், பணியாளர்கள் பலர் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us