ADDED : செப் 22, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பள்ளி வளாகங்களில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டெங்கு மஸ்துார் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக, வளாகங்களில் தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள், பயன்படுத்தாத தண்ணீர் தொட்டிகள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றில் மீண்டும் மழை நீர் தேங்காத வகையில் மக்கள் நடவடிக்கை எடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் டெங்கு பரவும் விதம் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், வட்டார மருத்துவ அலுவலர் முனீஸ்வரி தலைமையில் ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
