UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 05:04 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த செப்.,ல் 99 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை சார்பில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஜன., முதல் செப்., வரை 457 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். செப்., மாதத்தில் மட்டும் 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 9 அரசு மருத்துவமனைகள், 34 தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வருவோர் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.
தொடர் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படுவோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 37 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கை உடனுக்குடன் மேற்கொள்ளப்படுகின்றன. களப்பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட சுகாதார அலுவலர் அர்ஜுன் குமார் தெரிவித்தார்.–––
