/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துணை முதல்வர் வருகை ரத்து ரோடு சீரமைப்பு தொடருமா
/
துணை முதல்வர் வருகை ரத்து ரோடு சீரமைப்பு தொடருமா
ADDED : நவ 11, 2024 04:04 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சித்திட்டப்பணிகள், துறை ரீதியாக நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணை முதல்வர் உதயநிதி நவ.,13ல் வருவதாக இருந்தது. கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இதனால் மழையால் சேதமடைந்த சாலைகள் குண்டு, குழியுமான பகுதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்டன. நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புகளுக்கு வண்ணம் தீட்டுதல், கலெக்டர் அலுவலக பகுதியில் சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர்.
இந்நிலையில் துணை முதல்வர் ராமநாதபுரம் வருகை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ரோடு சீரமைப்பு பணி தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.