/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆவணங்களை பராமரிக்காத விதை விற்பனை நிலையத்தின் உரிமம் ரத்து துணை இயக்குநர் எச்சரிக்கை
/
ஆவணங்களை பராமரிக்காத விதை விற்பனை நிலையத்தின் உரிமம் ரத்து துணை இயக்குநர் எச்சரிக்கை
ஆவணங்களை பராமரிக்காத விதை விற்பனை நிலையத்தின் உரிமம் ரத்து துணை இயக்குநர் எச்சரிக்கை
ஆவணங்களை பராமரிக்காத விதை விற்பனை நிலையத்தின் உரிமம் ரத்து துணை இயக்குநர் எச்சரிக்கை
ADDED : ஆக 28, 2025 11:19 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் விற்பனை உரிமம், இருப்பு பதிவேடு, விலைப்பட்டியல் உள்ளிட்டஆவணங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். தவறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என ராமநாதபுரம்,சிவகங்கை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் இப்ராம்ஷா தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் உள்ள விதை விற்பனைநிலையங்களில் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர்இப்ராம்ஷா ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் கூறியதாவது:
பிற மாநிலங்களில் இருந்துஅதிகளவில் வரப்பெற்ற சன்னரக உண்மை நிலை மற்றும் சான்று பெற்ற நெல் விதைகள் தனியார் விற்பனை நிலையங்களில்விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது. விதைகள் பெறப்பட்டவுடன் விதை மாதிரிகளை எடுத்து விதைப் பரிசோதனைநிலையத்திற்கு அனுப்பி முளைப்புத்திறனை அறிந்து கொள்ளவேண்டும். இதில் அதிக முளைப்புத்திறன் உள்ள விதைகளைவிவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
விதைஉற்பத்தியாளர் அல்லது விநியோகஸ் தரிடம் இருந்து தனியார் விற்பனை நிலையங்களில் விதைகள் பெறப்பட்டவுடன்கடைகளில் முறைப்படி மரச்சட்டங்களில் மீது வைத்து ஈரப்பதம் பாதிக்காமல், உரம் மற்றும் பூச்சி கொல்லிகளுடன் சேர்க்காமல்தனியாக இருப்பு வைக்க வேண்டும்.
விற்பனை உரிமம், இருப்பு பதிவேடு, விலைப்பட்டியல்,முளைப்புத்திறன் அறிக்கை, பதிவுச்சான்று, விற்பனை ரசீது புக்ஆகியவைகள் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். மேலும்,மேற்கூறிய ஆவணங்கள் விற்பனை நிறுவனத்தில் பாதுகாப்பாகவைத்திருக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்விற்கு வரும் போதுஉடன் ஆவணங்கள் ஒப்படைக்க வேண்டும்.
விதை வாங்கும் விவசாயிகளுக்கு விற்பனை ரசீது கட்டாயம் வழங்குவதுடன் அதில் விவசாயி பெயர், முகவரி, விதையின்நிலை, குவியல் எண், காலாவதி நாள் ஆகியவைகள்இடம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்காணும் நடை முறைகளை கடைப் பிடிக்காத நிறுவனங்கள் மீது விதைச் சட்டப்பிரிவு களின் படிவிற்பனை தடை, உரிமம் இடை நிறுத்தி வைப்பு, உரிமம் ரத்து மற்றும் நீதிமன்றம் மூலம் தண்டனை போன்ற நடவடிக்கைகள்எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.