/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விடிய விடிய மழை பெய்தாலும் வயல்களில் தண்ணீர் இல்லையே ஆர்.எஸ்.மங்கலம் விவசாயிகள் வேதனை

ADDED : நவ 21, 2024 04:31 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இரவு, பகல் என விடிய விடிய மழை பெய்தும், நெல் வயல்களில் போதிய மழை நீர் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. செப்., மாதம் விதைப்பு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது வளர்ச்சி நிலையில் உள்ளனர்.
மேலும் நெற்பயிரின் வளர்ச்சியை துாண்டும் வகையில் விவசாயிகள் உரமிடும் பணியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
நெற்பயிருக்கு உரமிடும் பணியை மேற்கொள்ளும் போது நெல் வயலில் அதிகளவில் தண்ணீர் தேவை ஏற்படும். இதனால் விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து உரமிடும் பணியை தாமதப்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தொடர்ந்து விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது.
கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்த நிலையில் சாரல் மழையாக பெய்ததால் நெல் வயல்களில் போதிய தண்ணீர் இல்லாத நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் கனமழையை எதிர்பார்த்து நெல் விவசாயிகள் காத்திருக்கும் நிலை தொடர்கிறது.