/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செங்கல் சூளைகளுக்காக பனை மரங்கள் அழிப்பு
/
செங்கல் சூளைகளுக்காக பனை மரங்கள் அழிப்பு
ADDED : ஜூலை 31, 2025 11:05 PM

திருப்புல்லாணி; - திருப்புல்லாணி சுற்றுவட்டார கிராமங்களான சேதுக்கரை, தினைக் குளம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, வாலாந்தரவை, ரெகுநாதபுரம், பத்திராதரவை, நாகநாத சமுத்திரம் உள்ளிட்ட பகுதி களில் பெருவாரியாக பனை மரங்கள் வெட்டி அழிக்கப்படுகின்றன.
பலன் தரும் பனை மரங்களை ரூ.200 முதல் 300 வரை விலைக்கு வாங்கி அவற்றை பல துண்டு களாக வெட்டி டிராக்டர் மற்றும் லாரிகள் மூலமாக செங்கல் சூளை களுக்கு அனுப்பிவைக்கும் போக்கு தொடர்கிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பனை மரங்கள் இருந்து வந்த நிலையில் தற்போது அதிகளவு பனை மரங்களை ரியல் எஸ்டேட் மற்றும் செங்கல் சூளை எரிபொருளுக்காக வெட்டி அழிக்கின்றனர்.
இதே நிலைத் தொடர்ந்தால் மாவட்டத்தில் பனை மரங்கள் இல்லாமல் போய் விடும். பனை மரங்கள் இருக்கும் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப்படும். பனை மரத்தை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் நேரடியாகும் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றனர்.
பனை மரங்களை வெட்டி அழிக்கும் ஒரு சில ஏஜென்டுகள் தங்களது எல்லையை விரிவுபடுத்தி செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பனை மரங்களை பாதுகாப்பதற்கான உரிய விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.