/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பனைக்குளத்தில் ரோட்டோர மரங்கள் அழிப்பு
/
பனைக்குளத்தில் ரோட்டோர மரங்கள் அழிப்பு
ADDED : அக் 19, 2024 04:49 AM

தேவிபட்டினம் : பனைக்குளம் அருகேயுள்ள சித்தார்கோட்டையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் ரோட்டோரத்தில் உள்ள மரங்களை, மின் பராமரிப்பு என கூறி மரங்களை வெட்டி அழித்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேவிப்பட்டினம் அருகே கோப்பேரிமடத்தில் இருந்து சித்தார் கோட்டை, அம்மாரி, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம் வழியாக ராமநாதபுரம் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டோரத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த நிலையில் மின் கம்பங்களுக்கு சம்பந்தமில்லாத பகுதிகளில் உள்ள மரங்களையும் வெட்டி விறகுகளை சேகரித்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பனைக்குளத்தைச் சேர்ந்த அக்பர் அலி கூறுகையில், மின் கம்பிகள் செல்லும் மின்பாதையில் உள்ள மர கிளைகளை வெட்டினால் பிரச்னை இல்லை. ஆனால் மின் கம்பிகள் செல்லாத, சம்பந்தமில்லாத பகுதிகளில் உள்ள மரங்களையும் விறகுகளை விற்பனை செய்யும் நோக்கில் வெட்டி விற்பனை செய்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.