ஆசிரியர்களுக்கான டி.இ.டி., சிறப்பு பயிற்சி வகுப்பு
ஆசிரியர்களுக்கான டி.இ.டி., சிறப்பு பயிற்சி வகுப்பு
UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 10:06 PM
பரமக்குடி: பரமக்குடி தனியார் பள்ளியில் மஞ்சூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் ஆசிரியர்களுக்கான டி.இ.டி., பயிற்சி வகுப்புகள் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு பயிற்சி வகுப்புகள் வாரத்தின் இறுதி நாட்களில் நடக்கிறது.
மஞ்சூர் பயிற்சி நிறுவன முதல்வர் வெள்ளத்துரை தலைமை வகித்தார். அப்போது டி.இ.டி., பேப்பர் 1 மற்றும் 2 தொடர்புடைய பாடங்களான தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல், உளவியல் ஆகிய பாடங்களுக்கு சம்பந்தப்பட்ட வல்லுனர்களைக் கொண்டு நேரடி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அனுபவம் மிக்க பேராசிரியர்கள், புதிய தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒளி, ஒலியுடன் பயிற்சி நடக்கிறது.
இதில் 89 ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் இறுதியில் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு, ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் பெற சிறந்த ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என்றார்.
சண்முகவேலு, செந்தில்குமார் ஒருங்கிணைத்தனர்.
